கஜேந்திரனை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கின்றேன் – சீ.வீ.கே.சிவஞானம்

369 Views

வன்மையாக கண்டிக்கின்றேன்

தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரை  யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன் என சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

 

உயிரிழந்தவர்களை நினைவு கூருவது என்பது எமது அடிப்படை உரிமை, அதிலும் அகிம்சை வழியில் எமது இன விடுதலைக்காக உண்ணாநோன்பு இருந்து ஆகுதி ஆகிய தியாகி திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply