இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிப் கட்டத்தில் இடம்பெற்ற தவறிழைப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச ரீதியில் தனக்கு தடைகள் விதிக்கப்பட்டதன் அடிப்படையை கேள்விக்குட்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைப் படைப்பிரிவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொழில்முறை ரீதியாகப் போரிட்டதாகவும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க முயன்றதாகவும் அவர் குறித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,’சர்வதேச ரீதியில் எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அண்மையில் ஐக்கிய இராச்சியத்தாலும் எனக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகள் எதற்காக? நான் என்ன தவறு செய்தேன்? நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காகவே போரிட்டேன்’ என ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.



