பயங்கரவாத தடைச் சட்டதை நீக்க வலியுறுத்தி யாழில் உண்ணாவிரதப் போரட்டம்

387 Views

பயங்கரவாத தடைச் சட்டதை நீக்க வலியுறுத்தி

பயங்கரவாத தடைச் சட்டதை நீக்க வலியுறுத்தியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரியும் அவர்களது உறவுகள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக முன்றலில் உண்ணாவிரதப் போரட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின்பேரில் கடந்த 2020.07.06 ஆம் திகதி பயங்கரவாத குற்றப்புலனாய்வுத் துறையினராலும், இலங்கை இராணுவத்தாலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது யாழ் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டியும், பயங்கரவாத தடைச் சட்டதை நீக்க வலியுறுத்தியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறுகின்றது.

குறித்த போராட்டத்தை மேற்கொண்டுள்ள உறவினர்கள் யாழ். மாவட்ட செயலருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறையில் உள்ள குறித்த மூவரும் இன்று உண்ணாரவிதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Leave a Reply