ரம்புக்கனை கலவரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

நேற்றைய ரம்புக்கனை கலவரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவிடம் இருந்து விரிவான விசாரணை அறிக்கையை உடனடியாக கோரியுள்ளேன் என ஆணைக்குழுவின் தலைவி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைதியின்மையின் போது  காவல்துறை செயற்பாடுகள் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளது.

Tamil News