தமிழ்த்தேசியம் பேசுகின்றவர்களால் சின்னாபின்னமாக்கப்படும் மாவீரர்,போராளி குடும்பங்கள்-அனந்தி

287 Views

தமிழ்த்தேசியம் பேசுகின்றவர்களால் மாவீரர் போராளி குடும்பங்கள் சிக்கி சினாபின்னம் ஆகிக்கொண்டிருப்பதை இன்று அவதானிக்க முடிகின்றது. இது மிக கவலைக்குரிய நிலையாகும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.நேற்று 21 புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற பரப்புரை நிகழ்விலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தவிசாளரினால் தண்ணீர்த்தாங்கி ஒன்று இடித்து வீழ்த்தப்பட்டுள்ளது அங்கீகாரம்அற்ற கட்டடம் என்று பேசப்படுகின்றது கிளிநொச்சியில் எத்தனை மதில்கள் எத்தனை கட்டங்கள் இடித்தழிக்கப்படவேண்டிய இடங்களில் இருந்தும் இடித்தழிக்கப்படாது உள்ளது.

அரசபடைகளது எத்தனையோ கட்டங்கள் அனுமதியற்ற நிலையில் கட்டப்பட்டும் கூட கைவக்கமுடியாமல் உள்ளது ஆனால் அப்பாவிப்பொதுமக்கள் மீது தங்கள் அதிகாரத்தை செலுத்தியுள்ளனர் இது மிகவும் மோசமான கீழ்த்தரமான செயற்பாடு.

அதேவேளை மூன்று மாவீரர்களின் சகோதரி காணமலாக்ப்பட்ட உறவை தேடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தவிசாளரால்
தான் அச்சுறுத்தப்படுவதாகவும் அவரால் தனக்கு உயிராபத்து இருப்பதாகவும் அஞ்சுகின்றார். பெண்களை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளி பாலியல் இலஞ்சம் கோருகின்ற நிலைக்கு தமிழ்த்தேசியம் பேசுகின்ரவர்கள் கொண்டுவருகின்றார்கள் எனவே அவர்களது முகத்திரைகள் கிழிக்கப்பட்டு மக்களால் நிராகரிக்கப் படவேண்டும் என்றார்.

 

Leave a Reply