கேரளாவில் கன மழை-20க்கும் மேற்பட்டோர் பலி

148 Views

20க்கும் மேற்பட்டோர் பலி

இந்தியா- கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  அங்கு  மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த வீடுகள், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக கேரளாவின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக  கன மழை பெய்து வருகிறது.

முன்னதாக கேரளாவின் ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை  இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply