ஹசரா இனத்தைச் சேர்ந்த பொது மக்கள் தலிபான்களால் கொலை

ஹசரா இனத்தைச் சேர்ந்த பொது மக்கள்

ஹசரா இனத்தைச் சேர்ந்த பொது மக்கள் 13 பேரை ஆப்கனின் டைகுண்டி மாகாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் தலிபான்கள் கொலை செய்ததாகவும் அதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்திருப்பதாகவும் அம்னெஸ்டி இன்டர்னேஷனல் குழு கூறியுள்ளது.

செவ்வாய்கிழமை வெளியான அம்னெஸ்டி அறிக்கையில், கொல்லப்பட்ட 13 பேரில் 9 பேர் முன்னாள் ஆப்கன் அரசுப் படை வீரர்கள் என்றும், அவர்கள் தலிபான்களிடம் சரணைடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த கொலை ஒரு போர் குற்றம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 13 பேரில் ஒருவர் 17 வயது பெண் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆப்கனை விட்டு தப்பிச் செல்ல முயன்றதற்காக பொது மக்கள் இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது தலிபான் தரப்பு மறுத்துள்ளது.

ilakku-weekly-epaper-150-october-03-2021