கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது – அமைச்சர் டக்ளஸ்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சதீவை மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவது என்பது சாத்தியமற்ற விடயம் எனக் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

கச்சதீவினை இந்தியாவுக்கு வழங்குவது என்பது சாத்தியமற்ற விடயமாகும். அவ்வாறு வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளங்கள் முற்று முழுதாகச் சூறையாடப்படும் நிலை ஏற்படும். எமது நாட்டில் கடந்த 17 ஆம் ஆண்டு இழுவைமடிப் படகு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்திய மீனவர்கள் இழுவைமடிப் படகினைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையில் இலங்கை மீனவர்களின் கடற் றொழில் உபகரணங்களும் சேதப்படுத்தப்ப டுகின்றன. இதன் காரணமாக நமது மீனவர்கள் பல இன்னல் களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்” என்றும் அமைச்சா் தேவானந்தா தெரிவித்தாா்.