பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

“கலைமான்களை மேய்ப்பதென்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அது எங்கள் பண்பாட்டுப் பாரம்பரியம், எங்களது குடும்பம்,எமது அடையாளம்,   நிலத்துக்கும் எமக்கும் இடையே இருக்கின்ற தொடர்பு”

பூர்வீகக் குடிகளான ”சாமி” (Sámi people) இனமக்கள் காலாதிகாலமாக வாழ்ந்துவரும் நோர்வே, சுவீடன், பின்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ”சப்மி” (Sápmi) பிரதேசத்தில் ”இயோலுஸ் வின்ட்” (Eolus Vind) என அழைக்கப்படும் காற்றுவலு நிறுவனம் ”ஒய்பியெல்ல” (Oyfjellet wind project ) என்ற ஒரு புதிய காற்றாலையை உருவாக்கும்  செயற்றிட்டத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

நோர்வே நாட்டின் அதிகாரிகள் மற்றும் இத்திட்டத்தை உருவாக்கியவர்கள் ஆகியோருக்கும் அதேவேளை ”ஜிலென் நியார்க்க” ( Jillen Njaarke) என்று அழைக்கப்படும் கலைமான் கூட்டங்களைப் பராமரிக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கும் ”சாமி” சமூகத்துக்கும் இடையே ஆழமான முரண்பாடுகளை இப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புதிய செயற்பாடு தோற்றுவித்திருக்கிறது.

ஐரோப்பாவில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பசுமைச் சக்தியை நோக்கி மேற்கொள்ளப்படும் படிப்படியான மாற்றம்,நடைமுறைப்படுத்தப்படும் இம்மாற்றத்தின் பின்னாலுள்ள பல பொறுப்பற்ற செயல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

ஒய்பியெல்ல என்றழைக்கப்படும் இந்த திட்டத்தின் உரிமையாளர்களாக ஜேர்மனியைச் சேர்ந்த ”ஆக்குவிலா கப்பிற்றல்”( Aquila Capital) நிறுவனம் விளங்குகிறது. மேற்படி செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் பிரதேசத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள அலுமீனிய உலோகத்தை பிரித்தெடுக்கும் தொழிற்பாட்டை மேற்கொள்ளும் அல்கோவா(Alcoa) நிறுவனத்துக்கு, இக்காற்றாலையால் உற்பத்திசெய்யப்படும் மின்வலுவை விற்பதற்காக குறிப்பிட்ட நிறுவனத்துடன் மிகப்பாரிய இலாபத்தை ஈட்டக்கூடிய ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.2 2 பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

புதுப்பிக்கப்படக்கூடிய வலுவை உருவாக்கும் நீண்ட காலச் செயற்றிட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வளர்ச்சியையும், பசுமை தொழிற்சாலைகளையும்,பசுமை வேலைவாய்ப்புக்களையும் ஊக்குவிக்க முடியும் என்று மேற்குறிப்பிட்ட செயற்றிட்டத்துக்குரிய இணையத்தளம் குறிப்பிடுகின்றது.

அவர்களது செயற்பாடுகள் ஜில்லென் சமூகத்துக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்களைப் பார்க்கும்போது,அவர்களது பணிக்கூற்று தவறானது மட்டுமன்றி தமது பாரம்பரிய நிலங்களை நீண்ட கால அடிப்படையில் பாதுகாக்கும் வாழ்க்கைமுறையைக் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த சாமிக் குழுமத்தின் செயற்பாடுகளை மிகவும் அதிகளவில் பாதிக்கும் தன்மை கொண்டவை என்ற உண்மையை மூடிமறைக்கின்ற ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.

இக்காற்றாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்ற இடங்களிலும், இக்காற்றாலைகள் இயங்கும் போது அவை ஏற்படுத்தும் ஒலி கேட்கும் இடங்களிலும் மேய்வதை இந்தக் கலைமான்கள் தவிர்த்து வருகின்றன என்பது ஆய்வுகளில் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.

இக்கலைமான்கள் அதிலும் கர்ப்பிணியாக இருப்பவைகளும் புதிய குட்டிகளும் குளிர்காலத்தைப் பொறுத்தவரை மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுவதால, இக்காலத்தில் இடத்துக்கிடம் இடம்பெயரும் இயல்புடைய இக்கலைமான்களின் செயற்பாட்டை,ஒய்பியெல்ல போன்ற திட்டங்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

மிகவும் விரைவாக மாற்றமடைந்துகொண்டிருக்கும் காலநிலை,சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீது பிரயோகிக்கப்படும் அதிக அழுத்தங்கள்,நில அபகரிப்பு போன்றவற்றால் ஏற்கனவே பல இடர்ப்பாடுகளைச் சந்திக்கும் சாமி என்ற பூர்வீக இனத்தைச் சார்ந்த மேய்ப்பர்களுக்கும் அவர்களது கலைமான்களுக்கும் இவை மேலதிகமான நெருக்கீடுகளைக் கொடுக்கக்கூடியவை என்பது புரிந்துகொள்ளப்படவேண்டியதாகும்.3 2 பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

எழுத்தளவில்,நோர்வே நாட்டின் கலைமான் மேய்ப்புச் சட்டம் கலைமான்களின் இடப்பெயர்வுப் பாதையை மறிப்பது தொடர்பாக (எடுத்துக்காட்டாக இந்தப் புதிய காற்றாலைத் திட்டம்) ஒரு சட்டபபூர்வமான பாதுகாப்பைக் கொடுக்கவேண்டும். இருப்பினும் நோர்வே அதிகாரிகள் இந்த திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு உரிய அனுமதியை வழங்கியிருக்கிறார்கள்.

இந்தக் காற்றாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஜில்லென் நியார்க்க குழுமத்தைச் சார்ந்த சாமி மேய்ப்பர்கள், தாம் நீதிமன்றை நாடுவதாக ஜூன் மாதம் 31ம் திகதி தெரிவித்திருக்கிறார்கள். நோர்வீஜிய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் இன்னொரு அத்துமீறலிலிருந்து தமது நிலங்களைப் பாதுகாக்க அவர்கள் திடசங்கற்பம் பூண்டிருக்கிறார்கள்.தமது எதிர்காலம் தொடர்பாக இந்த சமூகம் உண்மையில் மிகவும் அச்சத்தோடு இருப்பதை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

“மனிதர்கள் பிறக்கிறார்கள். இறக்கிறார்கள். ஆனால் மலைகள் என்றுமே நிலைத்திருக்கின்றன” என்று ஜில்லென் நியர்க்கவைச் சேர்ந்த 53 வயதான கலைமான் மேய்ப்பரான ஹைக்கா கப்-பியெல் எம்மிடம் தெரிவித்தார்.

“காற்றுத் தொழிலைப் பொறுத்தவரையில் எங்களை அச்சத்திற்குள்ளாக்குவது எதுவென்றால, மலைகளைத் தவிர சாமி இனத்தவரான எங்களுக்கு வேறு எதுவுமே இல்லை. வேறு எதுவும் எங்களைப் பாதுகாப்பதில்லை, பராமரிப்பதில்லை,எமக்கு ஆறுதலை அளிப்பதில்லை”.

தொண்ணூற்றெட்டு வீதமான நோர்வேயின் மின் உற்பத்தி,இன்று புதுப்பிக்கக்கூடிய சக்தி வளங்களிலிருந்தே கிடைக்கின்றன. ஆனால் சாமி இனத்தவரின் வாழ்வாதாரங்களில் இவை ஏற்படுத்தும் பாதகமான விளைவுகள் தொடர்பாக பொது விவாதங்களிலோ அல்லது அரசியல் முடிவுகளிலோ குறிப்பிடப்படுவதில்லை.

ஒய்பியெல்ல என்ற திட்டம் தான் ஜில்லென் நியார்க்க சமூகம் சந்திக்கும் முதலாவது அத்துமீறல் என்று நோக்கமுடியாது. அவர்களது நிலங்களிலுள்ள பல்வேறு நீர்வலுவினால் இயக்கப்படும் ஆலைகள் அவர்களது மேய்ச்சல் நிலங்களைக் குறைத்தது மட்டுமன்றி, நீர்நிலைகளின் அணைக்கட்டுகளில் உள்ள உறுதியற்ற உறைபனியை அவர்களது கலைமான்கள் கடக்கும் போது,அவைகளுக்கு அது அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்தவிடுகின்றது.

நூற்றுக்கு மேற்பட்ட மேலதிக சலுகைகளை நோர்வீஜிய அரசு காற்று வலு அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்கனவே வழங்கியிருக்கிறது. இத்திட்டங்களில் சில சாமி இனத்தவரின் நிலங்களை உள்ளடக்குகின்றன.

நோர்வே நாடு மட்டுமே பசுமை சக்தியை உருவாக்கி சாமி இனத்தவரின் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது எனக்கொள்ள முடியாது. சப்மி என அழைக்கப்படும் பிரதேசத்தில் சுவீடன், பின்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த அரசுகளும் சாமி இனத்தவர்கள் தமது பாரம்பரிய வாழ்க்கைமுறைமையைக் கைக்கொள்ள முடியாத விதத்தில் சக்தி மற்றும் வளங்களைப் பிரித்தெடுக்கும் திட்டங்களை ஊக்குவித்திருக்கின்றன.4 2 பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

காலநிலை மாற்றத்தைப் பொறுத்த வரையில் நீடித்து நிலைக்கக்கூடிய எதிர்காலத்துக்கான தீர்வாக காற்று வலுவே ஐரோப்பா முழுவதும் முன்வைக்கப்படுகின்றது. புதிய ஐரோப்பிய பசுமை ஒப்பந்தம் போன்ற கொள்கைவழித் திட்டங்கள் மூலம் பல அரசுகள் வரியைக் குறைக்கின்றன,மானியங்களை வழங்குகின்றன,புதுப்பிக்கக்கூடிய சக்தியின் உற்பத்தியை முன்னகர்த்துவதற்காக சட்ட ஒழுங்குகளை தளர்த்திவிடுகின்றன.

ஒய்பியெல்ல காற்றாலையைச் சூழவுள்ள முரண்பாடுகள், எவ்வாறு அப்படிப்பட்ட கொள்கைகள்,பூர்வீகக் குடிகள் வாழும் பிரதேசங்கள் மேல் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் மற்றும் அழிப்புக்கள் தொடர்பான ஐரோப்பாவின் நீண்ட பாரம்பரியங்களுக்கு பங்களிப்புச் செய்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இப்படிப்பட்ட செயற்றிட்டங்களை ”பசுமைக் காலனீயம்”(green colonialism)என்று சாமி இனத்தைச் சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.

சுற்றுச்சூழல் தொடர்பாக மிகவும் காத்திரமாகப் போராடுகின்ற இயக்கங்கள் பல இவ்விடயங்கள் தொடர்பாக அமைதி காப்பது கவலை தரும் விடயமாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வளங்களைப் பிரித்தெடுத்தல் என்ற பெயரில் பூர்வீக குடிகளையும் அவர்களது நிலங்களையும் ஆக்கிரமிப்பதற்கு இந்த இயக்கங்கள் மௌனமாக ஒத்தாசை வழங்குகின்றன.

பூர்வீக குடிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விசேட தூதுவர்,சப்மி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புகளுக்கு எதிரான சாமி இன மக்களின் போராட்டங்களைக் கோடிட்டுக்காட்டும் ஒரு மிகவும் காத்திரமான அறிக்கையை வெளியிட்டார்.

ஆய்வாளர்கள்,சாமி அரசியல்வாதிகள் “சப்மியைப் பாதுகாருங்கள்” போன்ற அமைப்புக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி, சாமி இனமக்களின் பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்படும் தொழிற்றுறை சார்ந்த அபிவிருத்திகள் ஏற்படுத்தும் மிகப்பாதகமான விளைவுகள் தொடர்பாக எச்சரிக்கையை விடுத்ததோடு தொடர்ச்சியாக மீறப்படும் சாமி இனக்குழுமத்தின் உரிமைகளை மதிக்குமாறு அவர் அறிக்கையின் மூலமாகக் கோரிக்கை விடுத்தார்.454 kb பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

ஏற்கனவே மேற்கொள்ளப்படும் எல்லாவிதமான உட்கட்டுமானங்களை விடவும் மேலதிகமாக இன்னும் அதிகமான அறைகள், சுரங்கங்கள்,சக்தி நிலையங்கள் என்பன இப்பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

“இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று அவர்கள் சொன்னாலும் மொத்தத்தில் இக்கட்டுமானங்கள் மிகவும் அதிகமானவையாகும்” என்று ஜில்லென் நியார்க்க குழுமத்தைச் சேர்ந்த 28 வயதான பேர் மாட்டின் கப்-பியெல் என்ற மேய்ப்பர் தெரிவித்தார். இப்படிப்பட்ட நில அத்துமீறல்களின் காரணமாக சாமி இனமக்களின் நிலங்கள் அங்கு வாழுகின்ற மேய்ப்பர்களுக்கும் கலைமான்களுக்கும் நெருக்கீட்டை ஏற்படுத்தக்கூடிய பிரதேசங்களாக மாற்றப்படுகின்றன.

துரதிட்டவசமாக, ஒய்பியெல்லவுக்குத் தெற்காக 300 கிலோ மீற்றர் தொலைவில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய போசன் காற்றுவலுப் பிரதேசத்தைப் பார்க்கும் போது, நீதியைத் தேடி நீதிமன்றுகளை நாடும் செயற்பாடு ஜில்லென் நியார்க்க குழுமத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவிதமான பயனையும் தரப்போவதில்லை என்பது தெளிவாகின்றது.

போசன் குடாநாட்டில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய தரைசார்ந்த காற்றுவலுத் தொகுதியான ”போசன் வின்ட்” என்ற அபிவிருத்தியாளர்களுக்கு எதிராக ”போவ்சன் நியார்க்க” குழுமத்தைச் சேர்ந்த சாமி இனத்து கலைமான் மேய்ப்பர்கள் சட்ட நடவடிக்கையை எடுத்திருந்தார்கள். தாங்கள் பூர்வீகமாகச் செய்துவரும் கலைமான் மேய்ப்புத் தொழிலை எதிர்காலத்தில் தொடர்ந்து செய்யும் உரிமையை அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டட நிர்மாணங்கள் மீறுகின்றன என்று அந்தக் கலைமான் மேய்ப்பர்கள் வாதிட்டார்கள்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிர்மாணங்களின் காரணமாக சாமி இனக்குழுமத்தின் குளிர்கால மேய்ப்பு நிலங்களின் மூன்றிலொரு பகுதி அழிக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட நோர்வேயின் துரொண்ட்ஹைம் நகரில் அமைந்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், நட்டஈட்டுத் தொகையாக 89 மில்லியன் குரோன்கள் (9.4 மில்லியன் டொலர்கள்) செலுத்தப்படவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.

சாமி இனத்தவரின் பண்பாடு தொடர்ந்து நிலைப்பதை உறுதிப்படுத்துவதற்கு காற்றுவலுத் திட்டங்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமான விடயம் என்பதை மேற்படி தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.helping a sami boy with his k பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

ஒரு குறிப்பிட்ட ஐயத்தின் அடிப்படையில் பண வடிவில் கொடுக்கப்படும் நட்ட ஈடுகள் கலைமான் கூட்டங்களைப் பாதுகாக்கும் என்பதுடன் பன்னாட்டுச் சட்டம் மீறப்படுவதையும் தடுத்துநிறுத்துகிறது என்று மேற்கூறிய தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

இது எவ்வாறிருப்பினும்,சாமி இனத்தவர் தாம் இழக்கின்ற மேய்ச்சல் நிலங்களுக்கு ஈடாக குளிர்காலத்தில் தங்கள் கலைமான் கூட்டங்களுக்கு உணவாகக் கொடுப்பதற்கு குறுங்காலத்துக்குரியதும் மற்றும் அதிக செலவினத்தை ஏற்படுத்தக்கூடியதுமான செயற்கை உணவுவகைகளின் இறக்குமதியில் தங்கியிருத்தல் போன்ற தீர்வுகளை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு அனுமானிக்கிறது.

இதன் விளைவாக ஒன்றில் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கலைமான்களை மேய்க்கும் தொழிலை முற்றுமுழுதாகக்கைவிட வேண்டும் என்ற இரண்டு தெரிவுகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவுசெய்ய,நீதிமன்று இந்த சாமி இனத்தவர்களை நிர்ப்பந்திக்கிறது.

“நோர்வீஜிய சட்டத்தில் உள்ள மனித உரிமைச்சாசனங்கள் எவையும் சாமி இனத்தவராகிய எங்களைப் பாதுகாப்பதில்லை என்ற முடிவுக்கு நாங்கள் வரவேண்டியிருக்கிறது” என்று போசனில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட சாமி இனக்குழுமத்தைச் சேர்ந்த அர்விட் ஜாமா என்ற கலைமான் மேய்ப்பர் எங்களிடம் தெரிவித்தார்.

காற்றாலைச் செயற்பாடுகளை நிறுத்துவதைத் தவிர்த்து இந்த சமூகத்துக்கு நட்டஈடுகளை வழங்குவதன் மூலம், சாமி இனத்தவரின் வாழ்க்கை முறைக்கு நீதிமன்று ஒரு பணப்பெறுமதியைக் கொடுத்திருக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், அபிவிருத்தி மற்றும் வளங்களைப் பிரித்தெடுத்தல்; என்ற பெயரில் நோர்வீஜிய அரசிலும் காற்றாலைத் தொழிற்றுறைகளிலும் காணப்படும் பூர்வீக குடிகளின் உரிமைகளை ”விற்கும்” மனப்பாங்கை இது உறுதிப்படுத்தியிருக்கிறது.

“கலைமான்களை மேய்ப்பதென்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அது எங்கள் பண்பாட்டுப் பாரம்பரியம், எங்களது குடும்பம்,எமது அடையாளம்,   நிலத்துக்கும் எமக்கும் இடையே இருக்கின்ற தொடர்பு”

என்று நோர்வே சாமிப் பாராளுமன்றின் ஆளும் சபையைச் சேர்ந்த சீல்யா கரினா முஓட்கா தீர்ப்புக்குப் பின்னர் தெரிவித்தார்.

“ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு ஒரு கிராமம் தேவை” என்று சாமி மொழியில் ஒரு கூற்று இருக்கிறது.504 kb பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

மனிதர்கள்,கலைமான்கள், நிலம் என்பவற்றுக்கிடையேயான தொடர்பைப் பேணுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதை இது உள்ளடக்குகிறது.
மனிதர்களுக்கும் நிலம்,நீர் போன்ற மனிதர் அல்லாத உறவுகளுக்கும் இடையேயான பரஸ்பர தங்கியிருக்கும் பண்பு,சாமி இனத்தவரின் உலகக் கோட்பாட்டுக்கும் பாரம்பரிய நடைமுறைகளுக்கும் இன்றியமையாததாகும். நீடித்து நிலைக்கக்கூடிய உணவுற்பத்தி,சமூகங்களின் இடர் தாங்குதிறன், நிலப்பயன்பாடு போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்கு,செயற்றிறன்மிக்க தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் பரஸ்பரம் தங்கியிருக்கும் இந்தப் பண்பு முக்கியமான இடம் வகிக்க வேண்டும்.

பெரும்பான்மை இனச்சமூகங்களினால் முன்னெடுக்கப்படும் சசனநாயகச் செயன்முறைகள் பூர்வீகக் குடிகளின்குடிகளின் எதிர்பார்ப்புகளை உள்வாங்கத் தவறும் பட்சத்தில்,மிக அதிக செலவினத்தை ஏற்படுத்தக்கூடிய வழக்குளைத் தொடர்வதே,சாமி இனக்குழுமத்துக்கு தற்போது இருக்கின்ற ஒரேயொரு தெரிவாகும். ஆனால்,அடிப்படையில்,இந்த முரண்பாடுகள் தனியே சட்டரீதியான முரண்பாடுகள் மட்டுமல்ல. எமது சமூகங்களை நாங்கள் ஒழுங்கமைக்கும் போது நாம் பயன்படுத்தும் அடிப்படைக் கொள்கைகளையே நாம் கேள்வி கேட்க இந்த முரண்பாடுகள் எம்மைத் தூண்டுகின்றன.

ஜில்லென் நியார்க்க,போவ்சென் நியார்க்க போன்ற சமூகங்களின் பாரிய உரிமை மீறல்களைக் கருத்தில் எடுக்கும் போது,நாம் ஒரு சமூகம் என்பதன் அடிப்படையில் எங்களைப் பற்றி அது என்ன செய்தியைச் சொல்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

காலநிலையைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் பூர்வீக குடிகளின் பண்பாடுகள் பலியிடப்படும் போது எப்படிப்பட்ட ஒரு மனித சமூகத்தைக் கட்டிக்காக்க நாங்கள் பாடுபடுகிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது.

காலநிலைக்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து மனித மற்றும் பூர்வீகக் குடிகளின் உரிமைகளை ஓரங்கட்டுவது என்பது ஒரு பரந்த விடயமாகும். இரண்டாயிரத்து இருபது பெப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட ”நோர்வே நாட்டின்” இற்றைப்படுத்தப்பட்ட பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்துக்கான ”அர்ப்பணம்” என்ற ஆவணம்,இவ்விடயங்கள் தொடர்பாக பூர்வீக குடிகளைக் கலந்தாலோசிக்க வேண்டியதன் அவசியத்தை மிகவும் அரிதாகவே குறிப்பிடுகிறது.1176587267.jpg பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

செயன்முறையில், பசுமைக் காலனியத்துக்கு நோர்வே அரசு வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவைப் பார்க்கும் போது,காலநிலைச் செயற்பாடுகளின் முன்னோடி என்ற வகையிலும் பூர்வீகக குடிகளின் உரிமைகளின் பாதுகாவலன் என்ற வகையிலும் நோர்வே நாடு காண்பிக்கும் விம்பம் பெயரளவில் இருப்பதாகவே தோன்றுகின்றது.

இப்படிப்பட்ட ஏமாற்றும் மூலோபாயங்கள் காலனித்துவ நாடுகளின் தனித்துவமான இயல்பாகும். நிர்மாண வேலைகளுக்கான அனுமதியை வழங்க முதல் ஜிலேன் நியார்க்க குழுமத்தைச் சார்ந்த கலைமான் மேய்ப்பர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது என்று எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு காற்றுவலுத்தொகுதியை பூர்வீகக குடிகளைச் சேர்ந்த மேய்ப்பர்கள் உண்மையில்; விரும்பினார்களா என்பதை அரசோ அன்றேல் அபிவிருத்தியாளர்களோ கருத்திற்கொள்ளவில்லை. மேய்ப்பர்களைப் பொறுத்தவரை அழிவை ஏற்படுத்தக்கூடிய இரண்டு தெரிவுகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவுசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

கலந்தாலோசனையைப் பொறுத்தவரையில், இடது காலிலா அல்லது வலது காலிலா சுடப்படுவதை தெரிவுசெய்வது போன்றே இருந்தது என்று ஹய்க்கா தெரிவித்தார். அரசு,”எயோலுஸ் வின்ட்” மற்றும் அவர்களது சட்டத்தரணிகள் போன்ற அனைவரது செயற்பாடுகளும் சனநாயக விழுமியங்களுக்கு எதிரானவையாகவே இருந்தன என்று அவர் மேலும் கூறினார்.

மின்வலுவினால் இயக்கப்படும் மகிழுந்துகளையும் வரையறுக்கப்படமுடியாத புதுப்பிக்கப்படக்கூடிய சக்தியினால் இயக்கப்படும் அதிவேக தொடருந்துகளையும் கொண்ட நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு அதிசயப பூமியை உருவாக்குவதாக பசுமைச் சக்தித் தொழில் வாக்குறுதியளிக்கிறது. அதிகூடிய சக்தியை உள்ளடக்கும் ஓர் வாழ்க்கைமுறைக்கு நாம் என்றுமே அடிமைகளாக இருக்கலாம் என்ற மிக ஆபத்தான எண்ணத்தை இது வலுப்படுத்துகிறது.

சாமி இனக்குழுமங்கள் வாழுகின்ற பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள காற்றுச்சக்திப்பிரிவு ஒரு பிரித்தெடுக்கும் தொழிலாகும் என்பதுடன் நாமும் அதை அப்படித்தான் நோக்க வேண்டியிருக்கிறது.

புதுப்பிக்கக்கூடிய சக்தியென்பது நோர்வேயிலும் ஏனைய நாடுகளிலும் உருவாகும் ஒரு வகையான அடக்குமுறையென்பதை இனியாவது நாங்கள் ஏற்றுக்கொண்டாகவேண்டும். மேலும் மேலும் அதிக இலாபத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்படுகின்ற புதுப்பிக்கக்கூடிய சக்தியை உருவாக்கும் நிறுவனங்களின் கைகளில் பசுமையான எதிர்காலத்துக்கான திறவுகோல் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்குப் பதிலாக பல நூற்றாண்டுகளாக எமது சுற்றுச்சூழலைப் போஷித்துப் பாதுகாக்கின்ற பூர்வீகச் சமூகங்களுடன் நாம் இணைந்து செயற்படுவது அவசியமாகும்.e673538ac98473c3b7fffae23d227c80 பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் பசுமைக் காலனியம்-தமிழில் ஜெயந்திரன்

பூர்வீகக குடிகள், கறுப்பின மக்கள், ஏனைய நிறத்தவர்கள் மட்டில் மிக அதிகளவில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு ஆபத்து நிறைந்த காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். பசுமையான ஒரு வாழ்க்கை முறையை நாங்கள் ஏற்படுத்துவதற்கு காலநிலை நீதியையும், நீதியான மாற்றத்தையும் உறுதிப்படுத்தும் அவசரத்தேவை இருக்கிறது.

வெறுமையான ”பசுமை” சுலோகங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை விடுத்து நீதி என்பதற்குப் பொருள் என்ன என்பதையும் யாருக்கு அது தேவை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை அவதானமாகக் கேட்பதிலும் காலனித்துவத்துக்கு எதிராகப் பல்வேறு முனைகளில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு உருப்படியான ஆதரவைக்கொடுப்பதிலுமே இது தங்கியிருக்கிறது.

நன்றி- al jazeera