மிரிஹானவில் ஆர்ப்பாட்டம்: எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமையை அரசாங்கம் மதிக்க வேண்டும்-சர்வதேச மன்னிப்புச் சபை

343 Views

உரிமையை அரசாங்கம் மதிக்க வேண்டும்

மக்களின் உரிமையை அரசாங்கம் மதிக்க வேண்டும்

மிரிஹானவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவேளை கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தனது ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது

சட்டத்தரணிகளால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களின்படி மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதுடன் அவர்கள்மீது பயங்கரவாதத்தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வை வழங்குமாறுகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை ஆட்சியாளர்கள் தவிர்க்கவேண்டும் என சர்வதேச  மன்னிப்புச்சபை தனது ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது

‘பயங்கரவாத’ செயல்களுடன் தொடர்புடையவர்களெனச் சந்தேகிக்கப்படுவோரைத் தடுத்துவைப்பதற்கும் அவர்களுக்கான அடிப்படைப் பாதுகாப்பை மறுப்பதற்கும் பயங்கரவாதத்தடைச் சட்டம் இடமளிக்கின்றது. அத்தோடு அச்சட்டத்தின்படி வாக்கு மூலமும் ஓர் ஆதாரமாக ஏற்கப்படுகின்றது. எனவே அச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப் படவேண்டும் என சர்வதேச  மன்னிப்புச்சபை தனது ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply