இலங்கையில் ஆயுதம் தாங்கிய படையினர் கடமையில் ஈடுபடுத்த கோட்டாபய உத்தரவு

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் 40 ஆவது அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று  பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Tamil News