“கடவுள் விரும்பினால், விரைவில் திரும்புவேன்” – பிரேசில் அதிபர் ட்வீட்

119422527 4271177e 69fe 44f4 94eb 02d8b463c42f "கடவுள் விரும்பினால், விரைவில் திரும்புவேன்" - பிரேசில் அதிபர் ட்வீட்

நாள்பட்ட விக்கல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூவுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப் படலாம் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

தீராத விக்கல் காரணமாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த இராணுவ மருத்துவமனை, அறுவை சிகிச்சை செய்வதற்காக சா பாலோ நகரில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அவரை மாற்றியிருக்கிறது.

இந்நிலையில், தமது உடல் நல பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடாமல் தமது ருவிட்டர் பக்கத்தில் “கடவுள் விரும்பினால், விரைவில் திரும்புவேன்,” என்று அதிபர் போல்சனாரோ  பதிவிட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் தேர்தல் பரப்புரையின் போது தீவிர வலதுசாரி தலைவரான போல்சனாரூ கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்கானார்.

இதையடுத்து பல கட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த அவர் 3 ஆண்டு களையடுத்து தொடர்ச்சியாக விக்கல் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப் பட்டு, கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 "கடவுள் விரும்பினால், விரைவில் திரும்புவேன்" - பிரேசில் அதிபர் ட்வீட்