ஞானசார தேரரின் முகநூல் முடக்கம் ;அத்துரலிய தேரர் சீற்றம்

246 Views

இனவாதம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டதால் முகநூல் நிறுவனம் பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் கணக்கை தடை செய்துள்ளது.

எனினும் இந்த தடை தவறானது என தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ராதனா தேரர் சிறீலங்கா மனித உரிமைகள் அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

அரச மற்றும் தனியார் ஊடகங்கள் ஞானசார தேரரின் கருத்துக்களை வெளியிடுவதில்லை எனவே அவருக்கு முகநூலே பிரச்சார ஊடகமாக உள்ளது. இந்த நிலையில் தடை அவரை அதிகம் பாதித்துள்ளதாக தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply