உலக அளவில் பட்டினியால் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழப்பு – ஒக்ஸ்ஃபாம் ஆய்வில் தகவல்

உலக அளவில் பட்டினியால் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழக்கிறார்கள். உணவுப் பஞ்சம் உள்ளிட்ட சூழல் உலக அளவில் கடந்த ஆண்டை விட 6 மடங்கு அதிகரித்துள்ளது என்று வறுமைக்கு எதிரான அமைப்பான ஒக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வறுமைக்கு எதிரான அமைப்பான ஒக்ஸ்ஃபாம், உலக அளவில் கொரோனா காலத்தில் பட்டினி குறித்து ‘பல்கிப் பெரிய பட்டினி வைரஸ்’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையில்,

ஆப்கானிஸ்தான், எதியோப்பியா, தென் சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பட்டினி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. போரில் பட்டினி ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை மனிதநேய உதவிகள் கூட மறுக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ஸ்ஃபாம் அமைப்பின் அமெரிக்காவின் தலைவர் அபே மேக்ஸ்மேன் கூறுகையில், “உலக வெப்பமயமாக்கல், பெருந் தொற்றால் மோசமடைந்த பொருளாதாரம் ஆகியவற்றால், உலக அளவில் உணவுப் பொருட்கள் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு உலக அளவில் ஒரு கோடி மக்களைப் பட்டினியில் தள்ளியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 உலக அளவில் பட்டினியால் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழப்பு - ஒக்ஸ்ஃபாம் ஆய்வில் தகவல்