ஜனாதிபதித் தோ்தலுக்குத் தயாராகுங்கள் – அமைச்சரவையில் இன்று அறிவித்தாா் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்காலத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்குத் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கத்தினால் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்துள்ளார்.