வெசாக் தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு விடுதலை – ஞானசார தேரருக்கு இல்லை

வெசாக் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாய மற்றும் அமரபுர மகா சங்க சபையின் பீடாதிபதிகள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 பேர் மற்றும் மஹர சிறைச்சாலையில் இருந்து 37 பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள சில சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெறவுள்ளவர்களில் பத்து பெண் கைதிகளும் அடங்குவர்.