மீளமுடியாத நிலையில் ஜேர்மனின் பொருளாதார வீழ்ச்சி

கடந்த இரண்டு வருடங்களாக மீளமுடியாத நிலையில் ஜேர்மனின் பொருளாதார வீழ்ச்சி காணப்படுவதாகவும், 2023 ஆம் ஆண்டு 0.3 விகிதமாக இருந்த அதன் மொத்த உற்பத்தி கடந்த வருடம் 0.2 விகிதமாக மேலும் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் கடந்த புதன்கிழமை(15) வெளியிடப்பட்ட புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களில் இரண்டு வருடங்கள் தொடர் வீழ்ச்சி நிலையில் இருப்பது இதுவே முதல் தடவை. ஐரோப்பாவின் மிகப்பெரும் பொருளாதார நாடு வீழ்ச்சியை சந்திப்பது ஐரோப்பா வின் பொருளாதாரத்தை பாதிக்கும் என அவதானிகள் தெரிவித்துள்ள னர். 2022 ஆம் ஆண்டுக்கு முன் னர் ரஸ்யாவின் மலிவான எரி பொருட்களில் இயங்கி வந்த ஜேர்மனின் நிறுவனங்கள் அமெரிக்கா வின் தடை மற்றும் எரிபொருள் குழாய்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்காவின் மிகவும் அதிக விலை கொண்ட எரிபொருட்களை கொள்வனவு செய்ததால் இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதிக எரிபொருள் விலையினால் ஜேர்ம னின் உற்பத்திப் பொருட்களை மலிவான விலையில் சந்தைப்படுத்த முடியவில்லை. அதனால் கடந்த வருடம் ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற் பட்டுள்ளது.  கட்டிட நிர்மானத் துறையும் 3.5 விகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது என Destatis என்ற நிறுவனத்தின் தலைவர் றுத் பிரான்ட் தெரிவித்துள்ளார் எரிபொருள் விலை யேற்றத்தால் ஏற்பட்ட விலைஉயர்வைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ஜேர்மனியில் மூடப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியினால் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் ஜேர்மன் அரசு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் எதிர்வரும் மாதம் அங்கு தேர்தல் இடம்பெறவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.