மனிதகுல வாழ்விலும் வரலாற்றிலும் ஐதீகங் கள் (Myths) நிறையவே உண்டு. வசீகரமான கற்பனை நிறைந்த இத்தகைய ஐதீகங்கள் வெறுமையில் இருந்து தோன்றுவதில்லை. அவை நிகழ்தகவுள்ள ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து தோன்றுகின்றன. உதாரணமாக – யூதர்கள் பின்பற்றும் ‘வாக்களிக்கப்பட்ட பூமி’ ( The Promised Land – இறைவனால் யூதர்களுக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி) என்ற ஐதீகமானது அராபி யர்கள், பாரசீகர்கள், ரோமர்கள் என்போரால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய புவியியல் அமைவிடத்தை யூதர்கள் கொண்டிருந்த பின்னணியில், அதன் அடிப்படையிலான அரசியல் வரலாற் றுப் போக்கும் காணப்பட்ட சூழலில் மேற்படி ‘வாக்களிக்கப்பட்ட பூமி’ என்ற ஐதீகக் கோட்பாடு தோன்றியது போலவே இலங்கையிலும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் ‘தம்ம தீப’ – பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கென புத்த பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு இலங்கை – என்ற ஐதீகம் இந்தியாவுடன் பின்னிப் பிணைந்து ள்ள இலங்கையின் அமைவிட சூழலில் தோன்றி யது.
யூதர்கள் மீதான ஹிட்லரின் யூத இனப் படுகொலை வாதமும் வெறுமையில் இருந்து உருவாகவில்லை. அதுவும் ஒரு வரலாற்றுச் சூழலில் இருந்து உருவானது. ஹிட்லர் தனது அபகீர்த்திமிக்க Mein Kamf என்ற நூலில் முன்வைத்த ‘Culture founders (creators), culture bearers (carriers), culture destroyers’ என மனித குலத்தை மூன்றாகப் பிரித்து, அதில் யூதர்களை ‘Culture destroyers’ என்ற வகைப்படுத்தலுக்கூடாக மனித குல நாகரிகத்தின் அழிவுச் சக்தியாக விபரித்தார்.
கி.மு முதலாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசின் ஆதிக்கத்திற்கு யூத பூமி உட்பட்டதைத் தொடர்ந்து யூதர்கள் பெட்டி படுக்கைகளுடன் (ஆயுதம் தாங்காது) அடைக்கலம் தேடி, ஐரோப்பாவின் பல பகுதிகளையும் நோக்கிப் புலம்பெயர்ந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் குடியமரத் தொடங்கினர். நிலம் புலமின்றி, அரசியல் அதிகாரம் இன்றி பெட்டி படுக்கைகளுடன் ஐரோப்பா எங்கும் பறந்து சிதறிய யூதர்கள் ஆங்காங்கே கல்வி, வியாபாரம், வர்த்தகம், பன்றிப் பண்ணைகளை அமைத்தல், கைகளைச் சிறுகச் சிறுக உருவாக்குதல் வாயிலாக தமது அயராத உழைப்பால் அங்கு வாழ்ந்து வந்த சுதேசி களை விடவும் நன்னிலை அடைந்தனர். இதனால் யூதர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு ஹிட்லருக்கு முன்னே நூற்றா ண்டுகளிலேயே பல்வேறு நாடுகளிலும் தாக்குதல்களுக்கு உள்ளாகினர். படுகொலை செய்த வர்கள் என்ற வரலாற்று பிம்பம் ஒன்றையும் இதற்கு அனுசரணை ஆக்கிக் கொண்டனர்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியிற் தான் ஹிட்லரால் யூதர்கள் மீதான இனப் படுகொலை வாதத்தை கோட்பாட்டு ரீதி யில் முன்வைத்து, யூத இன அழிப்பை அரசியல் இராணுவ ரீதியில் கட்டமைப்புச் செய்ய முடிந்தது. இங்குள்ள முரண்நகை என்னவெனில், பூமியில் உள்ள எந்த ஒரு மனிதக் கூட்டமும் செய்திருக்காத அளவுக்கு யூதர்கள் விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் வாயிலாகப் பரந்துபட்ட முழு உலகத்திற்கும் ஒட்டுமொத்த மனித குல நாகரிக வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி உள்ளார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அவர்கள் மீது ஐரோப்பியர்கள் காழ்ப்புணர்வு கொண்டார்கள் என்பதும் அந்தக் காழ்ப்புணர்வுகள் இனப்படுகொலையைக் கட்டமைக்க ஏதுக்களாக அமைந்தன என்பதும் கவனத்திற்குரியது.
விஞ்ஞானம், தொழில்நுட்பம், தத்துவம், அரசியல், புவியியல், வானியல், உளவியல், விவசாயம் ஆகிய தலையாய அனைத்துத் துறைகளிலும் இந்தச் சிறிய இனம் முன்னணிப் பாத்திரம் வைத்து ள்ள உண்மையை ஏற்பதற்குப் பதிலாக யூதர்கள் மீது இனப்படுகொலை வாதம் அரங்கேற்றப் பட்டது. அதேவேளை, கி.மு 1000 ஆம் ஆண்டு களிலிருந்து பல்வேறு அரசுகளினாலும் பாதிப் புக்கு உள்ளாகிய வரலாற்றுப் பின்னணியில் இருந்து, “கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், இரத்தத்திற்கு இரத்தம்” என்ற மதக் கோட் பாட்டை யூதர்கள் வடிவமைத்தனர் என்ற துர்ப்பாக்கியத்தையும் சரிவர எடைபோட வேண்டியது அவசியம்.
எந்த ஒரு இனப்படுகொலை வாதத்தை யும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்
கொள்ளும் அதேவேளை, அத்தகைய இனப்படு கொலை வாதங்களுக்கான தோற்றமும் வளர்ச்சி
யும் பற்றிய வரலாற்று விதிகளை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சரிவரப் புரிந்து
கொள்ளாமல் அத்தகைய இனப்படு கொலை வாதங்களை வெற்றிகொள்ளவும் முடியாது என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண் டும். புனித போதனைகளும் தேனிலும் இனிய நல் மனங்களும் சோறு போடாது. இரத்தமும் தசையுமான யதார்த்தமும் அது சார்ந்த நடை முறையுந்தான் எதற்கும் முத்தாய்ப்பானது.
‘இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே’ (‘Genocide can be compensated only by secession’) என்ற நியமத்தைத்தான் வரலாறு முன்வைத்துள்ளது. இதனைவிட வேறெந்தப் புனித போதனைகளும் அதற் குத் தீர்வாகாது.
தொடரும்…