இலங்கையின் முன்னாள் புலனாய்வு பிரதானி சுரேஸ் சலே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுரேஸ் சலேவுக்கு நூல் வாசிக்கவோ அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கவோ அல்லது வெளித்தொடர்புகளுக்கான எவ்வித வசதிகளும் செய்துக்கொடுக்கப்படவில்லை.
அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.
எனினும் அவர் மனரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் என்பதற்கு அப்பால் உயரதிகாரிகளின் தேவைக்காகவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரிடம் இதுவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எவ்வித கேள்விகளும் கேட்கப்படவில்லை என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பயங்கரவாதியான அசாத் மொளானாவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



