விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடைகளை அரசாங்கம் முழுமையாக நீக்க வேண்டும்.அப்போது தான் இந்த நாடு முன்னேற்றமடையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சுதந்திரத்துக்காக போராடியது . மக்கள் விடுதலை முன்னணி முழு நாட்டையும் கைப்பற்ற ஆயுதமேந்தி போராடியது.ஜே.வி.பி மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்கிறது. இது எந்தளவுக்கு நியாயமானது.இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



