மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்காவிடின் வீதிக்கு இறங்கிப் போராடுவோம்: சாணக்கியன்

மட்டக்களப்பு திலுவான பகுதியில் மேய்ச்சல் நடவடிக்கைகளுக்காக கால்நடைகளை கொண்டு செல்லும் தமிழ் மக்களிடம் கப்பம் கோரப்படுகிறது எனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பெரும்பான்மை மக்களுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தால் எவ்வித தடையும் ஏற்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.

மேலும் தமிழீழத்துக்காக போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காக போராடுவதையிட்டு மனவேதனையடைகிறேன். எமது மாவட்டங்களில் நிலவும் மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடன் தீர்வை முன்வைக்க வேண்டும்.இல்லையேல் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.