காற்று மாசடைவினால் பொதுமக்களின் வாழ்க்கைக்கு மேலும் தாக்கம்

காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் மேலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் தெரிவித்துள்ளார்.

காற்று மாசடைவு காரணமாக, நகரப்புற மக்களின் வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக காற்று மாசடைவை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு நகரில் வாழும், குறைந்த வருமானம்கொண்ட மற்றும் கூலித்தொழிலில் ஈடுபடுவர்களின் வாழ்வில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.