செம்மணிக்கு நீதிகோரி மற்றுமொரு போராட்டத்திற்கு ஏற்பாடு!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கவுள்ள போராட்ட ஒழுங்கமைப்பு தொடர்பில், நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. அதில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகம் இன்றைய தினம் (05) தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதோடு, சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த போராட்ட முன்னெடுப்பு தொடர்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடல் ஒன்றை அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, இன்றைய தினம் (07) குறித்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர் கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள் ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.