இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு- பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு

இலங்கையில் அரச பாடசாலை மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளைய தினம் முதல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வெள்ளிகிழமைகளில் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, வெள்ளிகிழமைகளில் அரச விடுமுறை வழங்கும் சுற்று நிரூபம் இன்று வெளியிடப்பட்டது. அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து, ஏனைய அனைத்து சேவைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Tamil News