நுரைச்சோலையின் ஒரு பகுதி மூடப்படுகிறது- மின் தடை மேலும் தொடர வாய்ப்பு

நுரைச்சோலையின் ஒரு பகுதி மூடப்படுகிறது

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி நாளை நள்ளிரவு 12 மணி முதல் மூடப்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி 75 நாட்களுக்கு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை மூட வேண்டியுள்ளதாக குறித்த சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடஹேவா தெரிவித்தார்.

இவ்வாறு தற்காலிகமாக மூடப்படுவதால் மின்வெட்டை தொடர்ந்தும் அமுல்படுத்தும் நிலையேற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News