ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு

193 Views

AIMRYHDSIZPKHJDNXSM4W4FZCI ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் பிரதமர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

நாரா நகரில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரின் பின்னால் இருந்து இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளபபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2012ஆம் ஆண்டு ஜப்பானின் பிரதமராக பதவியேற்ற ஷின்சோ அபே, 2020ஆம் ஆண்டு உடல்நலப் பிரச்னைகள் காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஜப்பானின் வரலாற்றில் நீண்டகாலம் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் ஷின்ஷோ அபே.

தனது இளம்வயதிலிருந்து பெருங்குடல் அழற்சியுடன் (Ulcerative colitis) போராடி வரும் ஷின்சோ அபே, கடந்த 2007ஆம் ஆண்டு இதே காரணத்தினால் பதவியிலிருந்து விலக நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply