இலங்கையை எச்சரிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளா்கள்

நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான சட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜேர்மனி அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜேர்மனி வர்த்தக மற்றும் கைத்தொழில் விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி மாரியா அன்டொனியா வொன் சோன்பொர்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான சட்டங்கள் காணப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் மோசடிகள் காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதனை விடவும் வேறு நாடுகளில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்கள் ஆர்வம் காட்டலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலீட்டாளர்களை பாதுகாக்கக் கூடிய வெளிப்படைத்தன்மையுடைய சட்ட நடைமுறைப்படுத்தலானது கிரமமான முறையில் செயற்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் சட்ட ஒழுங்கினை பலப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நன்மதிப்பினை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் மேம்படுத்திக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.