இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் – பிரதமருக்கு இடையில் சந்திப்பு

hl 2784295525 இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் – பிரதமருக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து மைக்கல் எட்வட் அபல்டன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடான நியூசிலாந்து, இலங்கையின் பால் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சந்திப்பில் நட்பு நாடாக நியூசிலாந்து அரசாங்கத்துடன் எதிர்காலத்திலும் ஒத்துழைப்புடன் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும்  இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் என்ற ரீதியில் வெற்றிகரமாக சேவையாற்ற எட்வட் அபல்டனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021