வட கொரியாவில் முதல் கொரோனா இறப்பு

259 Views

வட கொரியாவில் முதல் கொரோனா இறப்பு

வட கொரியாவில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட முதல் இறப்பை உறுதி செய்துள்ளனர். பல்லாயிரம் பேர் காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 பேர் இறந்தனர். ஒருவருக்கு கொரோனா ஓமிக்ரான் திரிபு இருந்தது என்று அந்நாட்டு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

இதில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 187,000 நபர்கள் “தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் இருப்பதாக நிபுணர்கள் சிலநேரங்களில் உறுதிப்படுத்தினாலும் வியாழக்கிழமைதான் முதல் பாதிப்பு அதிகாரிகள் அறிவித்தனர்.

Tamil News

Leave a Reply