பூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
பூகம்பத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான துருக்கியில், மத்தியதரைக் கடலில் உள்ள இஸ்கெண்டருன் துறைமுகத்தின் ஒரு பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.
அங்கு எரிந்து போன கொள்கலன்களில்இருந்து பெருமளவில் கரும்புகை வெளியானது. அங்கு தொடர்ந்து 2-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் துருக்கி கடலோரக் காவல் படை கப்பல் உதவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூகம்பத்தின்போது கீழே விழுந்த கொள்கலன்களால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.