இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதத்தினை வழங்கியது பாரிஸ்கிளப்

இலங்கைக்கான கடன் உதவி தொடர்பில் பாரிஸ் கிளப் நாடுகள் சர்வதேச நாணயநிதியத்திற்கு நிதி உத்தரவாத்தை வழங்கியுள்ளன.

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் கடன் உதவிகளை வழங்குவதற்கு அவசியமான உத்தரவாதத்தை பாரிஸ் கிளப் வழங்கியுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான தங்கள் அர்ப்பணிப்பை பாரிஸ்கிளப் நாடுகள் வெளியிட்டுள்ளன.

சீனா உட்பட இலங்கைக்கு கடன்வழங்கிய ஏனைய உத்தியோகதரப்பினரும் இவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுக்கவேண்டும் என பாரிஸ் கிளப் வேண்டுகோள் விடுத்துள்ளது.