முல்லைத்தீவு காவல் நிலையத்தில் வெடிவிபத்து

296 Views

முல்லைத்தீவு காவல் நிலையத்தில் வெடிவிபத்து

முல்லைத்தீவு கடற்படையினரால் சட்டவிரோத வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை இன்று(10) இரவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது முல்லைத்தீவு காவல் நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. நபரையும், வெடிபொருளையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயன்ற போது வெடிபொருள் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்துவதற்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட வெடிபொருளே வெடித்து தீப்பற்றியுள்ளது.

வெடிபொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply