356 Views
கொழும்பு தொட்டலங்கா – கஜிமாவத்தை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் அந்தந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், உடமைகள் அல்லது உயிர் சேதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.