விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் யாழில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களில் பயிலும் 76 விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்விச் செலவுகளுக்காக தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மாணவர்களுக்குக் காசோலைகளை வழங்கி வைத்த பிரதமர், அவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
விசேட தேவையுடைய மாணவர்கள் தங்களின் கல்வியைத் தடையின்றித் தொடர்வதையும், அவர்களுக்கான சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதையும் அரசாங்கம் தனது சமூக நலன் சார்ந்த திட்டங்களில் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளதாக இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் மற்றும் பயனடைந்த மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



