வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றுபடுத்தி, மீளப்பெற முடியாத சமஷ்டி தீர்வு வேண்டும் : சிவில் பிரதிநிதிகள் கோரிக்கை

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலியில் நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, அந்தக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்த் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக பலாலி பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பலாலி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினரிடம் பொலிஸார் முறையான வாக்குமூலத்தைப் பதிவுசெய்து கொண்டனர்.

விசாரணைகளின் போது சட்டத்தரணி மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

வாக்குமூலம் அளித்துவிட்டு காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய கட்சி உறுப்பினர்கள், உடனடியாகவே மயிலிட்டியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.