ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே நடந்த எல்லையில் மோதலில் 100 படையினர் பலி

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான்(Armenia and Azerbaijan) எல்லையில் நடந்த மோதலில்   இரு பகுதியையும் சேர்ந்த   படையினர்100 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்மீனியா படையினர் 49 பேரும் அஜர்பைஜான் படையினர் 50 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

ஜர்முக், கோரி மற்றும் கபன் உட்பட எல்லைக்கு அருகிலுள்ள பல நகரங்களில் இன்று அதிகாலை ஷெல் தாக்குதல் நடத்தியதாக ஆர்மேனியா தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஷெல் தாக்குதல்கள் பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கு பதிலளிக்கும் வகையில் நடத்தப்பட்டதாக ஆர்மீனியா தெரிவித்துள்ளது.

சோவியத் ஒன்றியத்திலிருந்த காகசஸ் பகுதியைச் சேர்ந்த ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே ரஷ்ய – உக்ரைன் நெருக்கடி காரணமாக மீண்டும் போர் மோதல்கள் எழுந்தன.

அஸர்பைஜான் பிராந்தியமாக கருதப்படும் நாகோர்னோ – கராபாக் உரிமைக்காக இரு நாடுகளும் பல தசாப்தங்களாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.