அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 15 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

15 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

19 நாட்களுக்கு முன்னர் தமது பயணத்தை ஆரம்பித்த குழுவினர், பல நாள் இழுவை படகில் பயணித்த போது அவுஸ்திரேலிய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்கள் அவுஸ்திரேலிய விமானப்படையின் விசேட விமானத்தில்,அவுஸ்திரேலியப் படைகளின் அதிகாரிகளின் ஒரு பாரிய குழுவுடன் BIA வந்தடைந்தனர்.

இந்தக் குழு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் பின்னர் BIA இல் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 15 பேரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், குழுவை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்.

Tamil News