தமிழ்நாடு: உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழ் அகதிகள், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழ் அகதிகள்

உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழ் அகதிகள்

தமிழ்நாடு:திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய கோரி நீரை மட்டும் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 17 ஈழத் தமிழர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளில் 17 பேர்   “தம்மை விடுதலை செய்யுங்கள், அல்லது கருணைக் கொலை செய்யுங்கள்“ என்ற கோரிக்கையை முன்வைத்து  நீரை மட்டும் அருந்தி  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும்,  குறித்த தடுப்பு முகாமில் உள்ள 104 ஈழ தமிழ் அகதிகளும் தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணை கொலை செய்யுங்கள் என கோரிக்கையை விடுத்துள்ளனர். போராட்டுள்ளவர்கள்  தமது உடல் உறுப்புக்களை தமிழ் நாட்டு உறவுகளுக்கு தானம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.