ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களை அமிழ்த்துவதற்கு கூட்டமைப்பு முயற்சி- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களை

சமஸ்டி சமஸ்டி என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறிக்கொண்டு  ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களை அமிழ்த்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாம் என்ன நினைக்கிறோம், முதலில் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரட்டும்.அதிலுருந்து இப்போது உள்ள இருப்புக்களை நாம் பாதுகாப்போம்.ஆனால் இது தீர்வாகாது என்று கூறி வருகின்றோம்.

ஆனால் கூட்டமைப்பு சமஸ்டி என்று கூறிக்கொண்டு,தேர்தல் நிறைவடைந்த பின்னர் தமிழ் இன நீக்கத்தை செய்யும்வகையில்,ஒற்றை ஆட்சிக்குள் முடக்கும் செயற்பாட்டை செய்து வருகிறது.

13 ஆவது திருத்தத்தை மக்கள் ஆதரிக்கும் வகையில்,என்ன செய்யலாம், என்ற நாடகம் இங்கு நடைபெறுகிறது. 34 வருடங்களாக நாம் மறுத்த வந்த இந்த திருத்தத்தை ,இனப் பிரச்சினைக்கு தீர்வாக நம்ப வைக்கும் நாடகமே இங்கு நடைபெறுகிறது.

நாலாவது அரசியல் திருத்தத்தை ஒப்பு கொள்ள வைப்பதற்கு ,நாம் கேட்ட திருத்தத்தை தந்து விட்டோம் என்று எங்கள் வாயால் சொல்ல வைப்பதற்கு அரசு முனைகிறது.

இதை விடுத்து சி.வி .விக்னேஸ்வரன் அயோக்கிய தனமாக ,13 ஆவது திருத்தம் தொடர்பில் தாறுமாறாக கூறி வருகின்றார்.

இதை இந்திய முகவர்கள் எமக்கு திணிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.மக்கள் இதை விளங்கி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply