”இலக்கு” என்ற பெயரில்  வெளிவந்துள்ள போலியான தமிழ்த் தேசிய விரோத மின்னிதழ் 

ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்திற்கும் உலகத் தமிழ் மக்களின் கனாதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் துணைநிற்பதுடன், தமிழத் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் கண்ணியத்தோடு பங்காற்றிவரும் இலக்கு ஊடகத்தின் மீது விசனமடைந்துள்ள தமிழத் தேசிய எதிர்ப்பு சக்திகளும் அவர்தம் அடிவருடிகளும் ஊடக தர்மத்திற்கு மாறாக வடிவமைப்பு மாற்றப்பட்ட  வார மின்னிதழ் ஒன்றை கடந்த 14/6/2020  வெளியிட்டிருப்பது தொடர்பாக வாசகர்கள் எம் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்நடவடிக்கையானது எமது இலக்கை நோக்கி நாம் உறுதியாக நகர்கிறோம் என்பதையும் எதிரிகள் எமது வளர்ச்சி கண்டு கிலி கொண்டுள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டுவதாகவே நாம் பார்க்கிறோம்.

இலக்கின் தமிழ் தேசிய மேம்பாட்டிற்கான பணி மேலும் உறுதியுடனும், வேகத்துடனும் பரந்த வீச்செல்லையை தாண்டி விரிந்து சென்று தமிழ் தேசிய விடுதலைக்கான ஓர் உந்து சக் தியாக தொடரும் என்பதை எம்மினிய தமிழுறவுகட்கு அறியத்தருகின்றோம்.

கீழ்வரும் முகப்பே எமது ”இலக்கு” மின்னிதழுக்கு உரியதாகும்.

ila ''இலக்கு'' என்ற பெயரில்  வெளிவந்துள்ள போலியான தமிழ்த் தேசிய விரோத மின்னிதழ் 

கீழ்வரும் முகப்பு தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் போலி ”இலக்கு” மின்னிதழுக்கு உரியதாகும்.

Untitled ''இலக்கு'' என்ற பெயரில்  வெளிவந்துள்ள போலியான தமிழ்த் தேசிய விரோத மின்னிதழ்