முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுடன், நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
இதனால் சரணடைந்த பெண் போராளிகள் சித்திரவதைகளுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்களா? அல்லது இந்த உடலங்கள் சரணடைந்த விடுதலைப் புலிகளினுடையாதா, அல்லது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.