பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு

முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு

பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் அதிபராக பதவியேற்றார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட்  பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும்,விற்றாலும் அவர்களை சுட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தவர். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி டுட்ரேட் அச்சம் கொண்டது இல்லை. இதன் காரணமாக உலகம் முழுவதிலுள்ள மனித உரிமை அமைப்புகள் இவருக்கு வலுவான் கண்டனங்கள் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பதவியிலிருந்து ரோட்ரிகோ டுட்ரேட் விடைபெற்றதைத் தொடர்ந்து கடந்த மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் அதிபராக இன்று பதவி ஏற்றார்.

Tamil News