மின்சார கட்டணம் அதிகரிப்பு: மக்கள் போராட்டம்

உத்தேச மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மின்பாவனையாளர்கள் சங்கம் 6.9 மில்லியன் பாவனையாளர்களின் கையெழுத்தினை சேகரிக்கும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

மாத்தறை மற்றும் காலியில் முதலாம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம்  நேற்று (02) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாள் இடம்பெற்றது.

ஆறாம் திகதி  நாடாளாவிய ரீதியில் இந்த போராட்டம் இடம்பெறும்.

முதலாம் திகதி மாத்திரம் பத்தாயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன என மின்சாரம் நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக தெரிவித்தார்.

அமைச்சர் காஞ்சன வீரசேகரவின் சொந்த ஊரான மாத்தறையில் நாங்கள் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்தோம், காலியிலும் கையெழுத்துக்களை பெற்றோம் என அவர் தெரிவித்தார்.

முதலாம் திகதி பத்தாயிரம் கையெழுத்துக்களை பெற்றோம்,இரண்டாம் திகதி களனி விகாரiயின் முன்பாக கையெழுத்துக்களை சேகரித்தோம் மதியத்திற்குள் 3500 கையெழுத்துக்களை சேகரித்தோம்,காலிமுகத்திடலிலும் கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்பாகவும் கையெழுத்துக்களை சேகரித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காஞ்சன வீரசேகர அமைச்சின் செயலாளர் இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ஆகியோரின் நடவடிக்கைகளிற்கு எதிராக  6.9மில்லியன் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்,என தெரிவித்துள்ள மின்சாரம் நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக அவர்கள் செய்வது சட்டவிரோதமானது அவர்கள் மின்சார சட்டத்தினை மீறுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விஜயசேகர இந்த விவகாரங்களில் நிபுணத்துவம் மிக்கவர் இல்லை ஆகவே பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவே வரிகள் குறித்து சிந்திக்கவேண்டும்,எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் அமைச்சருக்கு எதிராக  நீதிமன்றம் செல்வோம் இந்த கையெழுத்துக்களை அதற்கு ஆதாரமாக பயன்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.