ஏழாலை பகுதி தாக்குதல்- குற்றவாளிகள் தப்பிச் சென்றதாக குற்றச்சாட்டு

குற்றவாளிகள் தப்பிச் சென்றதாக குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் தாக்குதல் நடத்த வந்த குற்றவாளிகள் தப்பிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து வந்தவர்களை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பை தருவதாகவும் சுன்னாகம் காவற்துறையினர் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் காவற்துறையினரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதன் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பாதிக்கப்பட்டவர்கள் இதனை தெரிவித்தனர்.

ஏழாலையில் கடந்த 04 ஆம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை தாக்கினர். தாக்குதல் மேற்கொண்டவர்களை சிலர் மடக்கிப் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


ilakku-weekly-epaper-150-october-03-2021