இந்தியாவிற்கு படகு மூலம்  தஞ்சம் கோர முயற்சித்த எட்டு பேர் மன்னாரில் கைது

112 Views

இந்தியாவிற்கு படகு மூலம்  தஞ்சம் கோர முயற்சித்த குழுவொன்றை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு மன்னார் கடற்பரப்பில் வைத்து  ஐந்து ஆண்களும், ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளும் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்கள்  மன்னார், வெலிமடை மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் மேலதிக சட்ட விசாரணைகளுக்காக மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply