இலங்கையில் சிறுபான்மையினரை மௌனமாக்க முயற்சி-அமெரிக்க செனெட் குழு கவலை

இலங்கை இராணுவத்தினர் மீது அமெரிக்க செனட் குழு கடும் எச்சரிக்கை - ஜே.வி.பி  நியூஸ்

இலங்கையில் இன மத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் செனெட் வெளிவிவகார குழுவின் உத்தியோகபூர்வ ட்விட்டரில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலைசெய்யப்பட்டதை நான் வரவேற்க்கும் அதேவேளை அவர் கைதுசெய்யப்பட்டமை அச்சுறுத்தப்பட்டமை துன்புறுத்தப்பட்டமை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என செனெட் குழுவின் தலைவர் செனெட்டர் மெனெட்டெஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு படையினர் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள்  துன்புறுத்தல்கள் குறித்தும்  இனமத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கான  நடவடிக்கைகள் குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.