யாழில் நடைபெறும் சர்வதேச மாநாட்டின் முக்கியத்துவத்தை குறைக்கும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் – சிவயோகநாதன்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் அதனுடைய வலுவையும் குறைப்பதற்கான சில வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். எனவே அவைகள் தவிர்க்கப்பட வேண்டும், நிறுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் சபாரெத்தினம் சிவயோகநாதன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இந்த ஊடக சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றைய தினத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமானது யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் அன்றைய தினத்தினை ஒரு சர்வதேச மாநாடாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து செய்துள்ளார்கள்.

எனவே அன்றைய தினத்தில் நடைபெற இருக்கின்ற அந்த மாநாட்டில், தமிழ் பேசும் மக்களாக, தமிழர்களாக நாங்கள் அன்றைக்கு அந்த மக்களுக்கு நடந்த இன அழிப்பின் ஒரு அங்கமாக அந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது உறவினர்கள் கையில் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொறுப்பு வாய்ந்த அரசினுடைய முப்படைகளினுடைய கைகளில் ஒப்படைக்கப்பட்ட அந்த அப்பாவி மக்கள் கூட காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சிறுகுழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வயது முதிர்ந்த முதியவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அருட்தந்தையர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது மிகவும் உலகத்திலேயே இரண்டாவதாக அதிகமான மனிதர்கள் காணாமல் ஆக்கப்பட்ட நாடு என்ற ஒரு பட்டியலை இந்த இலங்கை அரசாங்கம் ஸ்ரீலங்கா பெற்றிருக்கின்றது. அது எம்மை பொறுத்தவரையில் மிகவும் வேதனையான ஒரு கவலையான ஒரு விடயமாகும்.

எனவே இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு எதிராக சில சக்திகள் தாங்களும் அதை ஒரு இன்னுமொரு போராட்டங்கள் போன்ற ஒரு போராட்டங்களை நடத்தி நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் அதனுடைய வலுவையும் குறைப்பதற்கான சில வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். எனவே அவைகள் தவிர்க்கப்பட வேண்டும், நிறுத்தப்பட வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்றதையும் நாங்கள் கூறிக்கொள்வதுடன்,

25 ஆம் தேதி நேற்றைக்கு நேற்றையக்கு முதல் நாள் காணாமல்போனோர் அலுவலகம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலானது உள்ளக பொறிமுறைக்குள் காணாமல்போனோர் அலுவலகத்தின் ஊடாக இழப்பீடு வழங்குதல் மற்றும் காணாமல் போனவர்களுக்கான சான்றிதலை வழங்குவது தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த ஏற்பாட்டிற்காக அதிகமான நபர்கள் வாகனங்கள் மூலமாக அந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள் அல்லது சென்றிருந்தார்கள்.

அந்த நேரத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் உறவுகளானவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இந்த ஜனநாயக நாட்டில் இந்த மாதிரியான சர்வதேச நீதி வேண்டி போராடிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், இலங்கை அரசாங்கமானது காணாமல்போனோர் போன்ற அலுவலகங்களுக்கு ஊடாக காணாமல் ஆக்கியோர் மற்றும் காணாமல் போனோர் இரு தரப்பையும் ஒன்றாக இணைத்துக்கொண்டு உள்ளக பொறிமுறைக்குள் அந்த பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொள்கின்றது

காணப்பட்டோர் அலுவலகம் அதாவது காணாமல்போனோர் அலுவலகத்தின் மூலம் எந்தவொரு சட்ட ஏற்பாடுகளோ அல்லாட்டி போனால் பொறுப்புகூறலோ இல்லாத ஒரு இடத்தைத்தான் அந்த ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு கீழ்தான் அந்த காணாமல்போனோர் அலுவலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. எனவே அந்த காணாமல்போனோர் அலுவலகத்தினுடைய செயல்பாடு எம்மைப் பொறுத்தவரையில் ஒரு கண்துடைப்பு.