பொருளாதார நெருக்கடி-அங்கீகரிக்கப்பட்ட நிதி வழங்கல் கட்டமைப்புக்களின் உதவியை நாட வேண்டும்

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தாமதிக்காமல் சீரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாடு தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார நிலை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள பணவீக்க உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணய பற்றாக்குறை, மின்விநியோகத்தடை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் நெருக்கடியை தாமதிக்காமல் சீரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும் இது சட்டத்தின் ஆட்சிலும் நாட்டின் நிர்வாகத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

தற்போது முகம்கொடுத்துள்ள நெருக்கடிக்கு நிலைபேறான தீர்வை வழங்கக்கூடிய, அங்கீகரிக்கப்பட்ட நிதி வழங்கல் கட்டமைப்புக்களின் உதவியை நாட வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply