கொழும்புத் துறைமுகத்தில் 1,700 கொள்கலன்கள் தேக்கம்

393 Views

கொழும்புத் துறைமுகத்தில்

இலங்கையில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க முடியாத காரணத்தினால் நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 18 ஆம் திகதி வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply