துருக்கி, கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  – பலர் உயிரிழப்பு

610 Views

துருக்கியின் ஈஜியான் கடலோர பகுதியிலும், கிரீஸின் சேமோஸ் தீவிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதோடு உயிரிழப்புகளும்  ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், 7.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 419 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இரு இடங்களிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக கடல் பகுதியில் ஏற்பட்ட மாற்றத்தினால் கடல் நீர் கடலோர நகருக்குள் புகுந்துள்ளது. இரு இடங்களிலும் உணரப்பட்ட நிலநடுக்கம் கிரீஸில் ஏதென்ஸ் நகரிலும் துருக்கியில் இஸ்தான்புல்லிலும் உணரப்பட்டாதாக கூறப்படுகின்றது.

இந்த இரு நாடுகளிலும் நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு என்றாலும், தற்போதைய பாதிப்பு அதிகமானதாக அறிய முடிகிறது.

1904ஆம் ஆண்டில் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்திற்குப் பின்  ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாக தற்போதைய சம்பவம் கருதப்படுகிறது.

மேலும் சேமோஸ் தீவில் கடலோர பகுதியில் வாழும் சுமார் 45 ஆயிரம் பேரும் அந்த பகுதியில் இருந்து விலகியே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply